Tasty Recipes In Tamil

New Design


கிழங்கான் மீன் குழம்பு சுவையான புதினா சாதம் செய்முறை 
பேபி கார்ன் பஜ்ஜி செய்வது எப்படி 	
பேபி கார்ன் பஜ்ஜி செய்வது எப்படி சுவையான புதினா சாதம் செய்முறை

Recent Post

Showing posts with label kuzhambu. Show all posts
Showing posts with label kuzhambu. Show all posts
21 March 2014
கிழங்கான் மீன் குழம்பு

கிழங்கான் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

  • கிழங்கான் மீன் – ½ 
  • அரை கிலோ வெங்காயம் – 2 
  • தக்காளி - 1 
  • மிளகு – 2 தேக்கரண்டி 
  • சீரகம் – 2 தேக்கரண்டி 
  • சுக்கு – 1 துண்டு 
  • மிளகாய்த் தூள் – 1 மேசைக் கரண்டி
  • தனியாத் தூள் – 1 ½ மேசைக் கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 
  • புளி – எலுமிச்சையளவு 
  • பூண்டு – 1 
  • கடுகு, வெந்தயம் – அரை தேக்கரண்டி 
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப


செய்முறை

  • மீனை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். புளியை நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். 
  • சுக்கு, மிளகு, சீரகம், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 
  • பிறகு, அரைத்ததைப் புளியில் கரைத்து உப்பு போட்டுக் கலக்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்குங்கள். 
  • பின், கூட்டிய குழம்பை ஊற்றி, மீன் போட்டு மூடி, நன்றாகக் கொதித்த பிறகு கொத்துமல்லி தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு ரெடி! 

  • சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
13 March 2014
பேபி கார்ன் குடைமிளகாய் குழம்பு செய்வது எப்படி

பேபி கார்ன் குடைமிளகாய் குழம்பு செய்வது எப்படி



தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 3
குடைமிளகாய் - 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா தூள் – 1 கரண்டி
மல்லி தூள் - 1/2 கரண்டி
துருவிய தேங்காய் – 3 கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

   

செய்முறை:


  • பேபி கார்ன்,குடைமிளகாய்,வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பேபிகார்னுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து
  • குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோவேகவைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு,உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு , உளுந்து வெடித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • மேல் உள்ள அனைத்தும் வதங்கியவுடன், அதில் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மசாலா தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • பச்சை வசனை போன பின்னர் வேகவைத்த பேபி கார்ன் சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • இறுதியில் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.


சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்.
Breaking News
Loading...
Quick Message
Press Esc to close
Copyright © 2013 Tasty Tamil In Recipes All Right Reserved