Tasty Recipes In Tamil
13 March 2014

பேபி கார்ன் குடைமிளகாய் குழம்பு செய்வது எப்படி



தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 3
குடைமிளகாய் - 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா தூள் – 1 கரண்டி
மல்லி தூள் - 1/2 கரண்டி
துருவிய தேங்காய் – 3 கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

   

செய்முறை:


  • பேபி கார்ன்,குடைமிளகாய்,வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பேபிகார்னுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து
  • குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோவேகவைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு,உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு , உளுந்து வெடித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • மேல் உள்ள அனைத்தும் வதங்கியவுடன், அதில் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மசாலா தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • பச்சை வசனை போன பின்னர் வேகவைத்த பேபி கார்ன் சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • இறுதியில் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.


சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Breaking News
Loading...
Quick Message
Press Esc to close
Copyright © 2013 Tasty Tamil In Recipes All Right Reserved