கிழங்கான் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
- கிழங்கான் மீன் – ½
- அரை கிலோ வெங்காயம் – 2
- தக்காளி - 1
- மிளகு – 2 தேக்கரண்டி
- சீரகம் – 2 தேக்கரண்டி
- சுக்கு – 1 துண்டு
- மிளகாய்த் தூள் – 1 மேசைக் கரண்டி
- தனியாத் தூள் – 1 ½ மேசைக் கரண்டி
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- புளி – எலுமிச்சையளவு
- பூண்டு – 1
- கடுகு, வெந்தயம் – அரை தேக்கரண்டி
- உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
- மீனை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். புளியை நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- சுக்கு, மிளகு, சீரகம், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பிறகு, அரைத்ததைப் புளியில் கரைத்து உப்பு போட்டுக் கலக்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்குங்கள்.
- பின், கூட்டிய குழம்பை ஊற்றி, மீன் போட்டு மூடி, நன்றாகக் கொதித்த பிறகு கொத்துமல்லி தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு ரெடி!
சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!